காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும்.
காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.

கோயில் அமைப்பு

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக் குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலிருந்து தங்கம் வேயந்த கோபுர விமானத்தினை கண்டு களிக்கலாம்.

உற்சவ விழாக்கள்

ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் வெகு விமர்சையாக நடந்தேறும். இவற்றில் தேர்த் திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகப் பிரசிதம். நவராத்ரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை.